விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற நண்பனைப்பாராட்டிக் கடிதம் எழுதுக.
7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர் நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும், உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
0 Comments
Post a Comment