வட்டாட்சியருக்கு விண்ணப்பம்
இருப்பிடச்சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
அனுப்புநர்
சே.வெண்மதி,
த/பெ சேரன்,
562 திருவள்ளுவர் தெரு,
வளர்புரம் அஞ்சல்,
அரக்கோணம் வட்டம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003.
பெறுநர்
உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003.
ஐயா,
பொருள்:இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.
வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள் பணிவுடைய,
சே.வெண்மதி.
இடம்:அரக்கோணம்,
நாள்: 12-03-2022.
உறைமேல் முகவரி:
உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
அரக்கோணம்,
இராணிப்பேட்டை மாவட்டம்-631003
0 Comments
Post a Comment