நூலகம்-கட்டுரை நூலகத்தின் பயன்கள்
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:
நூலகம்
முன்னுரை– நூலகத்தின் தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை
முன்னுரை:
“நூலகம் அறிவின் ஊற்று”
”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்”
என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.
நூலகத்தின் தேவை:
சாதாரண மாணவர்களையும்
சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்”
ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .
நூலகத்தின் வகைகள்:
மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.
நூலகத்தில் உள்ளவை:
மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.
படிக்கும் முறை:
நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.
முடிவுரை:
“என்னை தலைகுனிந்து படித்தால்,
உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்”
என்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.
0 Comments
Post a Comment