உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

முறையீட்டுக் கடிதம்

அனுப்புநர்:

                        அ அ அ ,

                        ஆ ஆ ஆ,

                        இ  இ இ.

பெறுநர்:       

                     உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

                      உணவுப் பாதுகாப்பு ஆணையம்,

                     அரக்கோணம்-1


மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம். 

    நான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என் வீட்டிற்கு அருகிலிருந்த ராஜா உணவுவிடுதியில் மதிய உணவு உண்பதற்காகச் சென்றேன். புலவுச்சோறு விலை ரூபாய் 100 எனப் பலகையில் எழுதி வைத்திருந்தனர். நானும்  புலவுச்சோறு சாப்பிட்டுவிட்டு, உணவுக்கான தொகையைக் காசாளரிடம் செலுத்தினால், அவர் புலவுச்சோறு விலை ரூபாய் 150 எனக் கூறினார். மேலும் பல விளக்கங்களைக் கொடுத்து ரூபாய் 150 வாங்கிக்கொண்டார்.

   மேலும், உணவு உண்ட சில மணி நேரங்களிலேயே வாந்தி பேதி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தேன்.  கண் விழித்து பார்த்தபோது  மருத்துவமனையில் எனக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் உள்ள உணவு விடுதியில் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!!

                                                              இப்படிக்கு

                                                         தங்கள் உண்மையுள்ள      

                                                             அ.மதி ,

இடம்:மதுரை ,

நாள்:28-03-2025.

உறைமேல் முகவரி,

எண்.15,

பாரதி  தெரு,

மதுரை