சிறுசேமிப்பு -பயன்கள் கட்டுரை
குறிப்புச்சட்டம்
முன்னுரை
சேமிப்பின் பயன்
சேமிப்பின் அவசியம்
சேமிப்புத் திட்டங்கள்
பிற திட்டங்கள்
முடிவுரை.
முன்னுரை
சிறு துளி பெருவெள்ளம்', 'சிறுகக்கட்டி பெருக வாழ்' என்பது போன்று சிறு சேமிப்பு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது.
சிறு சேமிப்பின் பயன்
இளமையிலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம் வாழ்வை எத்தகைய சிக்கலும் இன்றி நடத்த உதவி செய்யும்.மேலும் அவசர காலங்களில் நாம் சேமித்து வைத்த பணம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற செலவுகளையும் நம்மால் தவிர்க்க முடியும்
சிறுசேமிப்பின் அவசியம்
மலைமீது மழை விழுந்து ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருவதனை அணைகளின் மூலம் நீரினைத் தேக்கி வைத்து நிலங்களுக்குப் பாசனமளித்தால் பயிர்க்குலம் செழிக்கும். உயிர்க்குலமும் தழைக்கும். அதுபோல ஒரு மனிதன் தன் உழைப்பினால் ஈட்டிய பணத்தை அணை போல சேர்த்து வைப்பது சிறுசேமிப்பாகும். தேனீக்கள் தேன் சேகரிப்பது போல எறும்புகள் உணவினைச் சேமிப்பது போன்றதாகும்.
சிறுசேமிப்புத் திட்டங்கள்
பள்ளிகளில் மாணவர்கள் சேமிப்பு திட்டமாக 'சஞ்சாயிகா' திட்டமுள்ளது. இளமைப் பருவத்தில் ஏற்படும் சேமிப்புப் பழக்கம் வாழ்வின் பிற்பகுதியில் பெருந்துணை புரியும்.
பிற திட்டங்கள்
அஞ்சலகங்களில் மாத சேமிப்புத் திட்டம், ஏழரை ஆண்டு தேசிய சேமிப்புத் திட்டம், பாதுகாப்பு சேமிப்புத் திட்டம், முதுமைக் கால சேமிப்புத் திட்டம், பரிசுப் பத்திரத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுகின்றன. அரசு வங்கிகளிலும் பருவகாலத் திட்டம், நீண்டகாலத் திட்டம் எனப் பல சேமிப்புத் திட்டங்கள் உள்ளன.
முடிவுரை
சிறுசேமிப்பினால் பணம் வீண் செலவு ஆகாமல் பெருகு வதோடு வட்டியும் கிடைக்கிறது. பணம் பாதுகாப்பாகவும் இருக்கும். எதிர்பாராத செலவுகளுக்கு கைகொடுத்து உதவும். நாட்டின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு நம் பணமும் பங்கு பெறுகிறது. எனவே சிறுசேமிப்பு வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ளதாகும்.
0 Comments
Post a Comment